தயாரிப்பாளரை காப்பாற்ற ஹீரோ முன்வர வேண்டும்: பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் வேண்டுகோள்

சென்னை: ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவர் ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம், ‘ரூம் பாய்’. இதில் சி.நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம், மும்பை மாடல் நிதி மரோலி நடித்துள்ளனர். அடுத்த மாதம் ரிலீசாகிறது.  இசை வெளியீட்டு விழாவில் ஜி.கே.எம்.தமிழ்குமரன், கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், ராதாகிருஷ்ணன், படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது தயாரிப்பாளர் சங்க செயலாளர் பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் பேசியதாவது:

ஒரு தயாரிப்பாளர் படம் தயாரிக்கும்போது, 200க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு தருகிறார். கதையை அவர் தேர்வு செய்வது இல்லை. ஆனால், அப்படம் தோல்வி அடைந்தால் அவர்தான் தெருவில் நிற்கிறார். ஆந்திரா விலுள்ள நடிகர்கள், தயாரிப்பாளரை காப்பாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் அந்த நிலை இல்லை. இங்கு 30 சதவீதம்தான் தயாரிப்புக்கு செலவாகிறது. 70 சதவீதம் ஹீரோவுக்கு சம்பளம். படம் தோல்வி அடைந்தால் அவர் வருவதே இல்லை. இங்கு நிறைய தவறுகள் நடக்கிறது. எந்த பிரச்னை என்றாலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உங்களுக்கு துணை நிற்கும்.

Related Stories: