சென்னை: டாக்டர் பிரஹபல் இயக்கத்தில் யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி நடித்திருந்த ‘ஜாக்கி’ என்ற படத்தை பிகே 7 ஸ்டுடியோஸ் எல்எல்பி தயாரிக்க, சக்தி பாலாஜி இசை அமைத்தார். கடந்த ஜனவரியில் திரைக்கு வந்த இப்படம், பிறகு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி, இந்திய அளவில் டாப்-10 டிரெண்டிங்கில் இடம்பெற்றது. இப்படக்குழுவினர், கடந்த 2021ல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘மட்டி’ என்ற படத்தை உருவாக்கி வெற்றிபெற்று இருந்தனர்.
இந்நிலையில் இயக்குனர் டாக்டர் பிரஹபல் அளித்த பேட்டியில், ‘அமேசான் ஓடிடி தளத்தில் தொடர்ந்து ‘ஜாக்கி’ படம் முன்னிலையில் இருக்கிறது. அடுத்து ‘மட்டி’ படத்தின் 2ம் பாகத்தை இயக்குகிறேன். கதை தயாராக இருக்கிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது ஸ்போர்ட்ஸ் மூவி மட்டும் கிடையாது. சஸ்பென்ஸ் நிறைந்த ஆக்ஷன் திரில்ல ராக இருக்கும். முதல் பாகத்தில் இருக்கும் விஷயங்கள் இதில் இருக்காது’ என்றார்.
