அதிகார வர்க்கத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதலை காட்டும் ஒரு அரசியல் திரில்லர் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. புலம்பெயர் அகதிகளை காக்கும் போராளிகள் குழு ஒன்று அதிகார வர்க்கத்தை எதிர்த்து போரிடுகிறது. இக்குழுவின் தலைவியான கறுப்பின பெண் தலைவி பெர்ஃபிடியா மற்றும் அவரின் கணவர் பாப் இணைந்து தங்கள் நீதிக்காக அதிகார வர்க்கத்தின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இதனிடையே பெர்ஃபிடியாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு பெர்ஃபிடியா ராணுவத்திடம் பிடிபட, பாப் குழந்தையுடன் தப்பித்து செல்கிறான். இவர்களை பழி தீர்க்கவும், அதிகாரத்தின் படி நிலையில் மேலே உயரவும் விரும்பும் கர்னல் லாக்ஜா (சியன் பென்) மற்றும் பாப் ஃபெர்குசன் (லியானர்டோ டிக்காப்பிரியோ) இணைந்து அவரை தேடுகிறார்கள். 16 வருடங்கள் கழித்து இந்த தேடுதல் வேட்டை என்னவானது என்பதை சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது.
