கே டி: தி டெவில் படத்தில் நோரா ஃபதேஹி நடனம்

சென்னை: ‘கே டி: தி டெவில்’ என்ற படத்தில் இருந்து, ‘திற நீ எந்தன் தாரணி திற நீ’ என்ற பாடலின் மூலமாக, கொண்டாட்டத்தின் உச்சத்தை வழங்குகிறார் நோரா ஃபதேஹி. அவருடன் இணைந்து சஞ்சய் தத் நடித்துள்ளார். பிரேம் இயக்குகிறார். கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே.நாராயணா தயாரிக்கிறார்.

துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி, வி.ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா நடிக்கின்றனர்.‌ அர்ஜூன் ஜன்யா இசை அமைப்பில் ராஜலட்சுமி பாட, மதன் கார்க்கி எழுதியுள்ளார். வரும் ஏப்ரல் 30ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Related Stories: