கல்லூரி மாணவர்களுக்கு தமன்னா கொடுத்த டிப்ஸ்

தென்னிந்திய படவுலகை தொடர்ந்து பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்து வருபவர், தமன்னா. சிறப்பு பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடனமாட 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை பிரேக்அப் செய்த பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிகிறது. தமிழில் சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ படத்தில், சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஷால் ேஜாடியாக நடிக்கும் தமன்னா, ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசியபோது, ‘நான் நடித்த ‘கல்லூரி’, எனது திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாகும்.

அது கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. கல்லூரியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் மாணவ, மாணவிகள் பயனுள்ள முறையில் கழிக்க வேண்டும். இனிமையான இந்த காலம் உங்களுக்கு மீண்டும் கிடைக்காது. சினிமாவில் கடந்த 21 வருடங்களாக நீடித்து வருகிறேன். ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவுக்கு மிகவும் நன்றி. அஜித் குமாருடன் ‘வீரம்’ படத்தில் நடித்தேன். அப்போது அவர் கேரவனில் இட்லி சமைத்து எனக்கு பரிமாறினார். நல்ல மனிதரான அவர் மிகவும் மென்மையானவர், நல்ல குடும்பஸ்தர்’ என்றார்.

Related Stories: