விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க மறுத்தது ஏன்? ஐஸ்வர்யா அர்ஜூன்

சென்னை: நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜூன், தமிழில் விஷால் ஜோடியாக ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு ஓரிரு படங்களில் நடித்தார். தனது தந்தை அர்ஜூன் இயக்கி நடித்த ‘சொல்லிவிடவா’ என்ற படத்தில் நடித்திருந்த அவர், சமீபத்தில் அர்ஜூன் இயக்கி நடித்த ‘சீதா பயணம்’ என்ற படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு நடிகரும், இயக்குனருமான உமாபதி ராமய்யாவும், ஐஸ்வர்யா அர்ஜூனும் இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

தொடர்ந்து நடிக்கும் ஐஸ்வர்யா அர்ஜூன், தான் தவறவிட்ட பிளாக்பஸ்டர் படம் குறித்து சொல்லியிருந்தார். இது குறித்து ஐஸ்வர்யா அர்ஜூன் கூறுகையில், ‘கடந்த 2018ல் வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்குத்தான் வந்தது. அப்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த படத்தை நான் நிராகரித்துவிட்டேன். அதற்கு பிறகு அப்படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பு பல்வேறு நடிகைகளிடம் சென்றதாக நான் அறிந்தேன். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த அந்த படம் சிறப்பாக இருந்தது. அந்த ஜோடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அந்த ஜோடி காதல் திருமணம் செய்துள்ளனர்’ என்றார்.

Related Stories: