72 வயதில் ஹீரோ ஆனார்

சென்னை: அனந்து புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம், ‘ஆஸ்ட்ரோ லேனா’. இதில் 72 வயது லக்‌ஷ்மன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், கதையை எழுதி இயக்கியுள்ளார். முக்கியமான வேடங்களில் செந்தில், யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, டாக்டர் சீனிவாசன், ஷகீலா, அப்புக்குட்டி, ஆர்த்தி, பிரியங்கா, பாவா லட்சுமணன், ரேகா, ராதா நடித்துள்ளனர்.

(சங்கர்) கணேஷ் இசை அமைத்துள்ளார். இயக்குனர் எஸ்.வினோத்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். மலேசியா, சிங்கப்பூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது. கிரக நிலை, ஜாதக ரகசியம், விண்மீன்களின் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படை யில், ரகசிய குற்றத்தை கண்டுபிடிக்கும் கதையுடன் படம் உருவாகியுள்ளது.

Related Stories: