50 ஏழை குடும்பத்துக்கு வீடுகள் பிரசாந்த் ஒப்படைத்தார்

 

சென்னை: தமிழ்நாட்டில் இயற்கை பேரிடர், தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டோர், மாற்றுதிறனாளிகள் என ஏழ்மையில் இருக்கும் 50 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் பிரசாந்த், பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை வழங்கினார். ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை சார்பில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பிரசாந்த் பேசியது: பொதுவாக கல்யாணம் பண்ணிப்பார். வீடு கட்டிப்பார் என்பார்கள். முதலாம் முயற்சிக்கு உதவி வந்தவர்கள் இப்போது இரண்டாம் முயற்சியிலும் தங்களது பங்களிப்பை வழங்குகிறார்கள்.

வீடு என்பது நமது உரிமை. முதல் கட்டமாக 50 பேருக்கு வீடு வழங்கியுள்ள ஜோய் ஆலுக்காஸ், ஏற்கனவே கேரளா, கர்நாடகத்தில் சேர்த்து 600 வீடுகளை வழங்கியுள்ளது. அடுத்தகட்டமாக தெலங்கானா, ஆந்திராவில் வீடுகள் கட்டித் தர உள்ளது என்றார்.
ஜோய் ஆலுக்காஸ் குழும தலைவர் ஜோய் ஆலுக்காஸ், நடிகர் தியாகராஜன், நடிகை தேவயானி, சார்மி, தயாரிப்பாளர் கதிரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: