அஜித்தின் அமராவதி படம் மீண்டும் ரிலீசாகிறது

சென்னை: அஜித் நடிப்பில் உருவான அமராவதி படம் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. 1993ம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித். சோழா கிரியேஷன்ஸ் சார்பில் சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்த இப்படத்தில் சங்கவி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கவிதா, நாசர், தலைவாசல் விஜய், சார்லி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் அஜித் சினிமாவுக்கு வந்தும் படம் வெளியாகியும் 30 ஆண்டுகள் ஆனதால் இப்படத்தை டிஜிட்டல் முறையில் ரீரிலீஸ் செய்வதாக படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் ேததி இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம் என தெரிவித்தார்.  இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அமராவதி ரீரிலீஸ் என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories: