அழகி போட்டி நினைவு ஒரு கெட்ட கனவு

மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படங்கள், வெப்தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் நடித்து வரும் டாப்ஸி, தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட சில அவமானங்களைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:  நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, இந்திய அளவில் நடந்த பல்வேறு அழகிப் போட்டி களில் பங்கேற்று இருக்கிறேன். அப்போது அங்கு போட்டியாளர்கள் மற்றும் போட்டியின் நடுவர் களுக்கு இடையே நடைபெற்ற ‘அரசியலை’ பார்த்து எனக்கு அருவெறுப்பு ஏற்பட்டது. அதை நேரடியாகப் பார்த்து மனவேதனை அடைந்தேன். போட்டி நடந்த நேரத்தில் எனது சுருட்டை தலைமுடியைப் பார்த்து அங்குள்ள பலர் கிண்டல் செய்தனர்.

இப்படிப்பட்ட சுருட்டை முடியுடன் இந்திய அழகிப் போட்டியில் நான் ஜெயிக்கவே முடியாது என்று கேலி செய்தனர். இதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து, ‘ஒருவேளை நீங்கள் இந்த இந்திய அழகிப் போட்டியில் ஜெயித்துவிட்டால், எங்களது நிறுவனங்களின் சார்பில் 3 வருடங்கள் பணியாற்ற வேண்டும். அப்போது 30 சதவிகித வருவாயை, எங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கலாம்’ என்று சொல்லி பயமுறுத்தினர். அந்த நாட்கள் எல்லாம் எனக்கு ஒரு கெட்ட கனவு காண்பது போலவே இருந்தது.

Related Stories: