பூமிகா சாவ்லா நடிக்கும் யூஃபோரியா

சென்னை: ஸ்ரீதேனாண் டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி வழங்க, குணசேகர் எழுதி இயக்கியுள்ள படம், ‘யூஃபோரியா’. குணா ஹேண்ட்மேட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வரும் பிப்ரவரி 6ம் தேதி படம் திரைக்கு வருகிறது. நீலிமா குணா, யுக்தா குணா தயாரித்துள்ளனர். பூமிகா சாவ்லா, கவுதம் வாசுதேவ் மேனன், சாரா அர்ஜூன், நாசர், ரோஹித், விக்னேஷ் கவி ரெட்டி, லிகிதா யலமஞ்சலி, அடாலா பிருத்விராஜ், கல்ப லதா, சாய் ஸ்ரீனிகா ரெட்டி, அஷ்ரிதா வேமுகந்தி, மேத்யூ வர்கீஸ், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ரவி பிரகாஷ், நவீனா ரெட்டி, லிகித் நாயுடு நடித்துள்ளனர். கால பைரவா இசை அமைக்க, பிரவீன் கே.போத்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி குணசேகர் இயக்கியுள்ளார். பிரவீன் புடி எடிட்டிங் செய்துள்ளார். நாகேந்திர காசி, கிருஷ்ண ஹரி வசனங்கள் எழுதியுள்ளனர். ‘துரந்தர்’ என்ற படத்துக்கு பிறகு சாரா அர்ஜூன் நடித்து உள்ளார்.

Related Stories: