ஏப்ரல் 1ம் தேதிதைவான் செல்கிறது இந்தியன் 2 படக்குழு

சென்னை: இந்தியன் 2 படக்குழுவினர் வரும் ஏப்ரல் 1ம் தேதி தைவான் நாட்டுக்கு செல்கின்றனர். கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவாகிறது. ஷங்கர் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ், லைகா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் சில காட்சிகளுக்காக படக்குழுவினர் தைவானுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி செல்கின்றனர். அங்கு தைபே நகரில் 4 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதையடுத்து தென்ஆப்ரிக்காவுக்கு செல்லும் படக்குழு, ஜோகன்னஸ்பர்க்கில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். முக்கிய ஆக்‌ஷன் மற்றும் சேசிங் காட்சிகள் இங்கு படமாக்க உள்ளனர். இதற்காக 20 நாட்கள் அங்கு தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏப்ரல் இறுதியில் சென்னை திரும்ப முடிவு செய்திருக்கிறார்கள்.

Related Stories: