கக்கன் வாழ்க்கை திரைப்படமாகிறது

சென்னை: மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் அமைச்சரவையில், மறைந்த கக்கன் அமைச்சராகப் பணியாற்றினார். அரசியல் வாழ்வில் தூய்மை, அமைச்சர் பதவியில் நேர்மை, மக்களுக்கு சேவை செய்வதே கடமை என்று வாழ்ந்து மறைந்த அவரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில், ‘கக்கன்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சங்கர் மூவிஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. ‘என் காதலி சீன் போடுறா’, ‘இரும்பு மனிதன்’, கன்னடத்தில் ஒரு படம் தயாரித்துள்ள இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஜோசப் பேபி, இப்படத்தை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி கக்கன் வேடத்தில் நடித்துள்ளார். மற்றும் ராஜேஸ்வரி, டாக்டர் பினு ஜோசப் நடித்துள்ளனர். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, தேவா இசை அமைத்துள்ளார்.பிரபு மாணிக்கம், ரகோத் விஜய் இயக்கியுள்ளனர்.

படம் குறித்து ஜோசப் பேபி கூறுகையில், ‘கக்கன் வாழ்வில் நடந்த நல்ல விஷயங்கள், போராட்டங்கள், அவமானங்கள்,  சோதனைகள் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. வரும் மே மாதம் படம் திரைக்கு வருகிறது. மதுரை, பொள்ளாச்சி, உடுமலை, சென்னை மற்றும் தென்தமிழக பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றார்.

Related Stories: