வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: வீடியோ வெளியிட்ட கோட்டா சீனிவாசராவ்

ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாசராவ் உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவி வந்த நிலையில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். வதந்திகளை நம்பவேண்டாம்’ என அவரே வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 700க்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கோட்டா சீனிவாச ராவ். வில்லன் வேடங்களில் நடித்தவர், தமிழில், ‘சாமி’, ‘குத்து’, ‘கோ’, ‘திருப்பாச்சி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். 1990ம் ஆண்டு பாஜவில் இணைந்து கோட்டா சீனிவாசராவ், 1999 - 2004 வரை ஆந்திரப் பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

மேலும், கடந்த 2015-ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில், கோட்டா சீனிவாச ராவ் உயிரிழந்ததாக வதந்தி பரவிய நிலையில், அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாக விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘நான் இறந்துவிட்டதாக பரவிய செய்தி என் கவனத்திற்கு வந்தது. 10 காவல் துறையினர் என் வீட்டிற்கு பாதுகாப்பிற்காக வந்தனர். அவர்களிடம் எதிர்காலத்தில் இதுபோன்ற போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க ஏதாவது செய்யுங்கள் என வலியுறுத்தினேன்’என்றார்.

Related Stories: