மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி

சென்னை: மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.  பிசாசு-2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இதில் ஆண்ட்ரியா, பூர்ணா ஆகியோருடன் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் நீண்டகாலமாக தயாரிப்பில் உள்ளது. சில பிரச்னைகளால் படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு அடுத்ததாக விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார் மிஷ்கின்.  விஜய் சேதுபதி தற்போது, ஷாருக்கானுடன் ஜவான் இந்தி படத்தில் நடித்து வருகிறார். கேத்ரினா கைபுடன் மேரி கிறிஸ்மஸ் படத்தை முடித்துவிட்டார். தமிழில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படங்களில் நடித்தபடி மிஷ்கின் இயக்கத்திலும் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

Related Stories: