சிகரெட் ஊதித்தள்ளும் அனன்யா: நெட்டிசன்கள் தாக்கு

மும்பை: நடிகை அனன்யா பாண்டே சிகரெட்களை ஊதித் தள்ளும் வீடியோ வைரலாகியுள்ளது. இந்தியில் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் அனன்யா பாண்டே. சமீபத்தில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமானார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இந்நிலையில் அனன்யா பாண்டே தற்போது பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். அனன்யா பாண்டேயின் குடும்பத்தில் திருமண கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அனன்யா பாண்டே, தனது தோழிகளுடன் சேர்ந்து புகைப்பிடித்திருக்கிறார்.

தொடர்ந்து பல சிகரெட்டுகளை அவர் ஊதித் தள்ளும் வீடியோ வெளியாகி, வைரலாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் அனன்யாவிற்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா என்று விமர்சித்து வருகின்றனர். நடிகர் சுன்கே பாண்டேயின் மகள் இப்படி இருப்பார் என நாங்கள் நினைக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories: