மலையாள படம் ரிலீஸ் தாமதம்: நிவின் பாலி - தயாரிப்பாளர் மோதல்

சென்னை: நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் துறமுகம். இப்படத்தை கம்மட்டி பாடம் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய ராஜீவ் ரவி இயக்கியிருக்கிறார். 2018ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த படம் பல்வேறு சிக்கல்களையும் தாண்டி தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோ நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நிவின் பாலி தயாரிப்பாளரின் இயலாமையால் தான் இப்படம் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது என குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போது படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுகுமார் தெக்கேபாட் நிவின் பாலிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டியளித்திருக்கிறார். அவர் கூறும்போது, ‘சினிமாவை மிகவும் காதலிக்கிறேன். சாகும்வரை சினிமாவில் தான் இருப்பேன். இந்த படத்திற்கு பல்வேறு வகையிலும் முட்டுக்கட்டைகளை போட பலர் முயற்சித்தனர். அவர்களின் பெயர்களை நான் வெளியிடப் போவதில்லை. அதே நேரம் பலர் இந்த இக்கட்டான காலகட்டத்தில் எனக்கு உதவினார்கள்.

அவர்களின் பெயர்களையும் குறிப்பிடப்போவதில்லை’ என்றார். இந்தப் பேட்டியின் ஒரு இடத்தில் கூட அவர் படத்தின் ஹீரோ நிவின்பாலியின் பெயரை பயன்படுத்தவில்லை. இது பற்றி கேட்கும்போது, ‘நான் பதிலளிக்கும் அளவுக்கு நிவின்பாலி பெரிய நடிகர் கிடையாது’ என்றார் சுகுமார்.

Related Stories: