போலீசாருடன் வாக்குவாதம்: குடிபோதையில் நடுரோட்டில் இளம்பெண் ரகளை

பாப்பாரப்பட்டி: தர்மபுரியை அடுத்த பாப்பாரப்பட்டியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் பெண் ஒருவர், அளவுக்கதிகமாக மதுகுடித்து விட்டு போலீசாரை மிரள வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரியை அடுத்துள்ளது பாப்பாரப்பட்டி. இங்குள்ள 3 ரோடு பகுதியானது சேலம், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. ஏராளமான கடைகள், மார்க்கெட்டுகள் உள்ளதால் எப்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்து பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில் இன்று காலை  பெண் ஒருவர், 3 ரோடு பகுதிக்கு வந்தார். மூக்குமுட்டும் அளவுக்கு போதையில் இருந்தவர், திடீரென நடுரோட்டில் படுத்து உருள ஆரம்பித்தவர், அங்கிருந்த பேரிகார்டுகளையும் தூக்கி நடுரோட்டில் வைத்தார். இதனால் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து அப்படியே நின்றது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய முயன்றனர். ஆனால் அந்த பெண், போலீசாருடன் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு, போலீசார் அந்த பெண்ணை அப்புறப்படுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்த பெண் எந்த பகுதியை சேர்ந்தவர்? எதற்காக ரகளை செய்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். …

The post போலீசாருடன் வாக்குவாதம்: குடிபோதையில் நடுரோட்டில் இளம்பெண் ரகளை appeared first on Dinakaran.

Related Stories: