மன்னார் பகுதியில் கீழடுக்கு சுழற்சி கோவை, நீலகிரியில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: மன்னார் வளைகுடா முதல் மேற்கு விதர்பா வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேற்கு ெதாடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையை பொருத்தவரையில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரையல் குறைந்தும், தென் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை ஒட்டியும் இருந்தது. கரூரில் நேற்று 101 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், மன்னார் வளைகுடா முதல் மேற்கு விதர்பா வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.

அதன் காரணமாக கோவை, நீலகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். அதன் தொடர்ச்சியாக 27ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் கோவை, நீலகிரி, மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. 26, 27ம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் படிப்படியாக உயரவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். சில இடங்களில் 90 டிகிரிக்கு மேல் இருக்கவும் வாய்ப்புள்ளது.

 

Related Stories: