2030ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் பசுமை பரப்பும் அழகிய பூங்காக்கள் நிறைந்த மாநகரத்தை உருவாக்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

 

சென்னை: திமுக என்றாலே வளர்ச்சி, திமுக என்றாலே நவீன உள்கட்டமைப்பு என்று திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: திமுக என்றாலே வளர்ச்சி, திமுக என்றாலே நவீன உள்கட்டமைப்பு, சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் ஒருபுறம், பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய, தரமான பேருந்துகள் மற்றும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள் மற்றொருபுறம்.

ஸ்டாலின் அறிக்கையில் நான் உறுதியளித்தபடி 2030ல் அதிகரிக்கப்பட்ட பசுமைப் பரப்பும், சீரான நடைபாதைகளும், அழகிய பூங்காக்களும் நிறைந்த மாநகரங்களை தமிழ்நாடெங்கும் உருவாக்கிக் காட்டுவோம்.
இவ்வாறு எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Related Stories: