‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பர்ஸ்ட் லுக்

தயாள் பத்மநாபன் கதை எழுதி இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இப்படத்தை 2 எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்க, டி பிக்சர்ஸ் சார்பில் தயாள் பத்மநாபன் இணைந்து தயாரிக்கிறார். வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிசி ஆண்டனி, சரவணன், மாறன், லோகா கண்ணன், நர்மதா, கவிதா பாரதி, கன்யா பாரதி, ‘அயலி’ மதன், சுப.வீரபாண்டியன் நடிக்கின்றனர்.

கவிதா பாரதி, தயாள் பத்மநாபன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதுகின்றனர். எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசை அமைக்கிறார். வி.பூபதி எடிட்டிங் செய்ய, அன்பு அரங்கம் அமைக்கிறார். தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Related Stories: