சென்னை: தனது பேச்சு சர்ச்சையானதால் அது பற்றி நடிகர் சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார். தமிழில் தீனா, சமுத்திரம், ஐ உள்பட பல படங்களில் நடித்தவர் சுரேஷ் கோபி. மலையாளத்தில் முன்னணி ஹீரோவான இவர் பாஜவில் இணைந்து, ராஜ்யசபா எம்.பியாகவும் இருக்கிறார். அவ்வப்போது ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இவர், அது தொடர்பான தனது கருத்துகளை பேசி வருகிறார். இதுபோல் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில், சுரேஷ் கோபி பேசும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், ‘கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்துபோவார்கள்’ என சுரேஷ் கோபி பேசுவது போல் அமைந்துள்ளது.
