யோகி பாபு நடிக்கும் 300வது படம்

தேவ் சினிமாஸ் சார்பில் டி.தங்கபாண்டி, எஸ்.கிருத்திகா தங்கபாண்டி, எல்.சுந்தரபாண்டி இணைந்து தயாரித்துள்ள படம், ‘அர்ஜூனன் பேர் பத்து’. ரா.ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். ‘தண்டகாருண்யம்’ பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுத, காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்துள்ளார். பி.சேகர் அரங்கம் அமைக்க, எம்.ஆர்.அருண் சந்தர் வசனம் எழுதியுள்ளார். ஓம் பிரகாஷ் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி, ரவி மோகன் வெளியிட்டனர். இது யோகி பாபு நடித்துள்ள 300வது படமாகும். கதையின் நாயகனாக அவர் நடிக்க, கதையின் நாயகியாக அனாமிகா மகி நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் காளி வெங்கட், அருள்தாஸ், இயக்குனர் லெனின் பாரதி, ‘அயலி’ மதன், சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, சவுந்தர்யா, சென்ராயன், ஹலோ கந்தசாமி, பாவா லட்சுமணன், ரஞ்சன் குமார் நடித்துள்ளனர். தமிழகத்தில் இடி, மின்னலுக்கு பயப்படும் மக்கள், ‘அர்ஜூனா! அர்ஜூனா!’ என்று சொல்வதை போல், தென்மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், ‘அர்ஜூனன் பேர் பத்து’ என்று சொல்வது வழக்கம். பழைய வாகனங்கள் விற்பதில் நடக்கும் மோசடிகள் குறித்தும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளை பற்றியும், இனி பழைய வாகனங்களை வாங்க இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது.

Related Stories: