நடுவர் குழு தலைவராக கே.பாக்யராஜ்: ‘ஃபிரேம் அன்ட் ஃபேம்’ தமிழ் திரைப்பட விருது விழா

சென்னை: தமிழ் திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை சிறப்பிக்கும் வகையில், ‘ஃபிரேம் அன்ட் ஃபேம்’ என்ற திரைப்பட விருது விழா, வரும் ஜனவரி 25ம் தேதி சென்​னை காமராஜர் அரங்கில் நடக்கிறது. இவ்விழாவை தயாரிப்​பாள​ரும், இயக்​குனரும், நடிகரு​மான சித்ரா லட்​சுமணன் நடத்துகிறார். இதுகுறித்த அறிவிப்பு நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, டி.சிவா கலந்துகொண்டனர்.

அப்போது சித்ரா லட்சுமணன் பேசியதாவது: திரைக்கலைஞர்​களின் பேட்​டி மற்றும் கருத்துகளை வெளியிடுவதை தாண்​டி, அவர்​களை சிறப்பித்து கவுரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விருது விழாவை நடத்துகிறேன். நடுவர் குழு​ தலை​வ​ராக கே.பாக்​ய​ராஜ் இருப்பார். நடுவர்களாக இளவரசு, அம்மா கிரியேஷன்ஸ் டி.சி​வா, தமிழ்நாடு திரைப்பட இயக்​குனர்​கள் சங்​க தலை​வர் ஆர்​.​வி.உதயகு​மார், பெப்சி தலை​வர் ஆர்​.கே.செல்​வ​மணி, குஷ்பு ஆகியோர் இருப்பார்கள். சிறந்த திரைப்​படங்​கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்பட 50 பிரிவு​களில் விரு​துகள் வழங்​கப்படும். வெப்தொடர்​களுக்கு கிடையாது. திரையுலக சாதனையாளர்களின் பெயர்களிலும் சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.

Related Stories: