ஐதராபாத்: தனுஷுடன் ‘பட்டாசு’ படத்தில் நடித்தவர் மெஹ்ரின். தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஐதராபாத்தில் நடிகை மெஹ்ரினுக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் நேற்று ரகசிய திருமணம் நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மெஹ்ரின் கூறியது:
தற்போது எல்லாம் பின்விளைவுகள் இல்லாமல் தவறான செய்தி எப்படி பரவுகிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. 2 ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன். ஆனால் தொடர்ந்து சீண்டப்படுவதால் இன்று பேச முடிவு செய்துவிட்டேன். எனக்கும், எனக்கு யாரென்றே தெரியாத ஒருவருக்கும் திருமணமாகிவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளனர். யாரோ வேலை இல்லாதவர் 2 நிமிட புகழுக்காக என் விக்கிபீடியா பக்கத்தை ஹேக் செய்திருக்கிறார். எனக்கு யாருடனும் திருமணமாகவில்லை. ஆனால் நான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால் நிச்சயம் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அதையே எக்ஸ் தளத்திலும் மெஹ்ரீன் தெரிவிக்க கமெண்ட்ஸ் வந்து குவிந்துவிட்டது.மெஹ்ரீன் விளக்கம் அளித்ததை பார்த்த ரசிகர்கள், பிரபலங்களுக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டதாக தகவல் பரவுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் தான் உங்களை பற்றியும் அப்படியொரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் மெஹ்ரீன். நீங்கள் சந்தோஷமாக உங்கள் வேலையை பார்க்கவும் என கூறியிருக்கிறார்கள்.
