ஆதி -நிக்கி கல்ராணி விரைவில் திருமணம்?

தெலுங்கில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. டார்லிங்  படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர்  ’யாகாவாராயினும் நாகாக்க’ ’மொட்ட சிவா கெட்ட சிவா’ ’ஹர ஹர மகாதேவி’ 'மரகத நாணயம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மரகதநாணயம் படத்தில் ஆதியுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் இருவரும் ஒன்றாக விமான பயணங்கள் மேற்கொண்டனர். ஆதி வீட்டில் நடந்த விழாக்களில் நிக்கி கல்ராணி கலந்து கொண்டார். இதனால் இருவரின் காதலும் உறுதியானது. தற்போது விரையில் நிச்சயதார்த்தம் மற்றும் அதனை அடுத்து திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முறையான அறிவிப்புகள் விரைவில் வெளிவர இருக்கிறது.

Related Stories: