வில்லன் ஆன விக்ராந்த்

விஜய்யின் சித்தி மகனான விக்ராந்த் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் தற்போது சசிகுமார் நடிக்கும் காமன்மேன் படத்தில் வில்லனாக நடிக்கிறர்.

இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது சசிகுமார், ஹரி பிரியா, விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவு செய்கிறார்.  இதில் சசிகுமார் சவுண்ட் என்ஜினீயராக நடிக்கிறார். விக்ராந்த் சாத்தான் என்கிற கொடூர வில்லனாக நடிக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

Related Stories: