பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் மனவாளமாமுனியின் நட்சத்திரத்தையொட்டி சுவாமி வீதி உலா

பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் மனவாளமாமுனியின் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு சுவாமி வீதிஉலா நடந்தது. பள்ளிகொண்டாவில் புகழ்பெற்ற உத்திர ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் மனவாளமாமுனியின் நட்சத்திரத்தை முன்னிட்டு சாற்று முறை உற்சவம் நடைபெற்றது. காலையும், மாலையும் உற்சவருக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.

தொடர்ந்து மாலை உற்சவ மூர்த்திகளான பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் மனவாளமாமுனி சுவாமிகள் முக்கிய வீதிகளில் வீதிஉலா சென்றனர். அப்போது  கோலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வடிவேல்துரை, மணியம் அரி, உத்திர ரங்கநாதர் கோயில் உற்சவ சேவை சங்கத்தினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.

Related Stories: