நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்ட நடனேஸ்வரர்

வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றவர் நடனேஸ்வரர். திருவாரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் மருத நிலத்திற்கு உரிய இயல்புகளோடு உள்ளது தலையாலங்காடு என்னும் திருத்தலம். இங்கு நடனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. தெற்கில் ஒன்றும், கிழக்கில் ஒன்றுமாக வளைவுகள் மட்டுமே உள்ளது. கோவிலுக்கு வெளியே கீழ்புறத்தில் ‘சங்குதீர்த்தம்’ என்ற பெயரில் திருக்குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்தில் வெளியில் இருந்து நீர்வரத்து இல்லை.

ஊற்று நீர்தான் பெருக்கெடுத்து குளத்தை நிரப்புகிறது. இந்த தீர்த்தம், அந்த மண்ணுக்கே உரிய வேதி, மருந்துப்பொருட்களோடு கலந்து இருப்பதால், வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றதாக விளங்குகிறது. இந்தத் திருக்குளத்தில் நீராடி விட்டு, ஆலயத்திற்குள் உள்ள சுவாமி, அம்பாளுக்கு 5 நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அவ்வாறு வழிபாடு செய்பவர்களுக்கு, அபிஷேக விபூதி மற்றும் மூலிகை மருந்து கொடுக்கப்படுகிறது. அதனை எடுத்துச் சென்று 48 நாட்களுக்கு விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு, மூலிகை மருந்தினை சாப்பிட வேண்டும். நோய் தீர்ந்ததும் மீண்டும் ஆலயத்திற்கு வந்து சங்கு தீர்த்தத்தில் நீராடி, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து, புதுத் துணிகள் சாத்தி வழிபட வேண்டும். இந்த திருக்குளத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நீராடினால் கண்கண்ட பலன் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: