சிகப்பு, வெள்ளை காராமணி சுண்டல்

என்னென்ன தேவை?

சிகப்பு காராமணி, வெள்ளை காராமணி - தலா 1 கப்,

காய்ந்தமிளகாய் - 6,

உப்பு - தேவைக்கு,

தேங்காய்த்துருவல் - 1/2 கப்.

தாளிக்க...

கடுகு - 1 டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,

பொடித்த பச்சைமிளகாய் - 2,

கறிவேப்பிலை - சிறிது,

எண்ணெய் - தேவையான அளவு,

விரும்பினால் பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

இரண்டு காராமணியையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு உப்பு சேர்த்து குழையாமல் வேகவைத்து வடித்துக் கொள்ளவும். மிக்சியில் வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாயை பொடித்து கடைசியில் வறுத்த தேங்காய்த் துருவலையும் சேர்த்து பொடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து காராமணியில் கொட்டி ஐந்து நிமிடம் கிளறி, அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

குறிப்பு:

விரும்பினால் பொடித்த மாங்காய் அல்லது எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.

Related Stories: