இந்த வாரம் என்ன விசேஷம்?

நவம்பர் 10, சனி

     
Advertising
Advertising

திரிதியை. திருவஹிந்திரபும் திருத்தேர்.

நவம்பர் 11, ஞாயிறு  

ஐயடிகள் காடவர்கோன். குமாரவயலூர் முருகப் பெருமான் கஜமுகாசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல். அன்ன வாகனத்தில் புறப்பாடு.

நவம்பர் 12, திங்கள்  

பஞ்சமி. குமார வயலூர் முருகப் பெருமான் சிங்கமுகாசுரனுக்கு பெருவாழ்வு அருளல். வெள்ளிமயில் வாகனத்தில் பவனி.

நவம்பர் 13, செவ்வாய்  

கந்த சஷ்டி. திருச்செந்தூர் உள்ளிட்ட சகல முருகன் கோயில்களிலும் சூரஸம்ஹாரம். திரு இந்தளூர் பரிமளரங்கர் யானை வாகனத்தில் திருவீதியுலா.

நவம்பர் 14, புதன்

சப்தமி. திருவோண விரதம். பொய்கையாழ்வார். திருமலை திருப்பதி புஷ்ப யாகம், காஞ்சி ஸ்ரீகுமரகோஷ்டம், குமரன்குன்றம் ஸ்ரீ கந்தர் திருக்கல்யாணம்.

நவம்பர் 15, வியாழன்  

அஷ்டமி. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. பூதத்தாழ்வார். வேளூர் ஸ்ரீவள்ளியம்மை திருக்கல்யாணம்.

நவம்பர் 16, வெள்ளி   

அட்சய நவமி, கடைமுகம், மயிலாடுதுறை, திருவையாறு, தலைக்காவிரி ஆகிய தலங்களில் துலா உற்சவபூர்த்தி. சுவாமிமலை முருகப் பெருமான் இடும்ப வாகனத்தில் புறப்பாடு. பேயாழ்வார்.

Related Stories: