ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் கார்த்திகை சோமவாரம் : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயிலில் ஆகாச தீபமும் ஏற்றப்பட்டது. பஞ்ச பூதங்களில் வாயு தலமாகவும், ராகு, கேது சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பூஜை செய்யும் தலமாகவும் விளங்கும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்நிலையில் கார்த்திகை மாத சோமவாரத்தின் முதல் நாளான நேற்று காலை முதல் மாலை வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீகாளத்தீஸ்வரரையும் ஞானபிரசூனாம்பிகை தாயாரையும் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், பெண் பக்தர்கள் பாதாள விநாயகர் சன்னதி அருகில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் சேவை மண்டபம் அருகில் ஆகாச தீபம் ஏற்றப்பட்டது.

Related Stories: