பலன் தரும் ஸ்லோகம் : (ஜுரத்தைப் போக்கும் ஸ்லோகம்...)

காலோ தைவம் கர்மஜீவ ஸ்வபாவ

த்ரவ்யம் க்ஷேத்ரம் ப்ராண ஆத்மா விகார

தத்ஸங்காதோ பீஜரோஹ ப்ரவாஹ

த்வன்மாயைஷா தந்நிஷேதம் ப்ரபத்யே!

ஸ்ரீமத் பாகவதம்

பொதுப் பொருள்:

காலம், தெய்வம், கர்மம், ஜீவன், ஸ்வபாவம், திரவியம், க்ஷேத்ரம், பிராணன், அகங்காரம், இந்திரியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையே சரீரம். அதற்கு பீஜமாக இருப்பது கர்மம். அதிலிருந்து முளைப்பது சரீரம். இப்படி கர்மாவினால் சரீரமும், சரீரத்தால் கர்மமென்றும் பரம்பரையாய் வந்து கொண்டிருக்கிறது. இதுவே பரமாத்மா கிருஷ்ணனுடைய மாயை. அந்த மாயையைத் தடுக்கின்ற பகவானே தங்களுக்கு நமஸ்காரம்.

(இந்தத் துதியை காய்ச்சல், தலைவலி போன்ற வியாதிகள் வரும்போது கூறி வந்தால் பகவான் கிருஷ்ண பரமாத்மாவால் நோய் விலகி, சுபிட்சம் கூடும்.)

Related Stories: