சண்டக்கோழி நடிகையான மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் தற்போது மகள் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் படத்திலும் வாய்ப்புகள் தேடி வருகிறார். திருமணத்திற்கு பிறகு உடல் குண்டாகிவிட்ட மீரா ஜாஸ்மின் வெளியில் வராமல் இருந்தால் இப்போது உடல் எடையை குறைத்து பிட்டாகி இருக்கிறார். அந்த படங்களை தமிழ் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு தனது மேலாளர் மூலம் அனுப்பி வருகிறார்.