வாரிசுகளின் காதல் கதை

மறைந்த இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் 13  படங்களுக்கு மேல் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சிசிலியாராஜ்  இயக்கியுள்ள படம், ‘எப்போ கல்யாணம்’. இதில் லிவிங்ஸ்டன், ரமாபிரபா, மகாநதி சங்கர், வினய் பிரசாத், ‘என் தங்கை  கல்யாணி’ ரத்னமாலா, விஷ்வா, நிகில், சவுமியா, ரகு, ‘மிஸ் பெங்களூரு’ சான்ட்ரோ மிக்டெல், அரவிந்த் ஜான் விக்டர் நடித்துள்ளனர். புகடி வக்‌ஷா, தர்மா ஒளிப்பதிவு செய்துள்ளனர். என்.எஸ்.கிருஷ்ணகுமார் இசையில் கிருதியா பாடல்கள் எழுதியுள்ளார். இருதயராஜ் தயாரித்துள்ளார். பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளின் காதலை எவ்வாறு  கையாளுகின்றனர் என்பது மையக்கரு. சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Related Stories: