25 மில்லியனை கடந்த புஷ்பா டிரெய்லர்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடிப்பில் வரும் 17ம் தேதி வெளியாகும் படம் புஷ்பா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் படம் வெளியாகிறது. நேற்று இந்த படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியிடப்பட்டது.

டிரெய்லர் வெளியாக சில மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களை இது கடந்தது. ஆந்திரா காடுகளில் செம்மரம் கடத்தப்படுவது தொடர்பான கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படத்தின் ஹிந்தி டிரைலரும் வெளியாகியுள்ளது. இதுவரை 17 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது இந்த ட்ரைலர்.

Related Stories:

More