பான்மசாலா விளம்பரத்தில் இருந்து அமிதாப் விலகல்

சென்னை: பான்மசாலா விளம்பரத்தில் இருந்து அமிதாப் பச்சன் விலகியுள்ளார். நடிகர் அமிதாப் பச்சன், பான்மசாலா விளம்பரம் ஒன்றில் நடித்து வந்தார். இதில் நடிக்க வேண்டாம் என தேசிய புகையிலை எதிர்ப்பு அமைப்பு அமிதாபுக்கு கோரிக்கை வைத்தது. போலியோ மருந்து விளம்பர தூதராக இருக்கும் அமிதாப், உடலுக்கு தீங்கு தரும் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க கூடாது என புகையிலை எதிர்ப்பு அமைப்பு கோரிக்கை விடுத்தது. இதற்கிடையே ரசிகர்களும் அமிதாப் இதில் நடிக்க வேண்டாம் என கோரிக்கைகள் விடுத்தனர். இதையடுத்து இந்த விளம்பரத்திலிருந்து அமிதாப் விலகியுள்ளார். இந்த விளம்பரத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். இதற்காக வாங்கிய பெரும் தொகையையும் அமிதாப் பச்சன் திருப்பி கொடுத்து விட்டார்.

Related Stories:

More
>