திரைப்பட தயாரிப்பாளர் மரணம்

சென்னை: தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு, நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆரம்ப காலத்தில் செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். பிறகு தயாரிப்பாளரான அவர், தெலுங்கில் கல்யாண்ராம் நடித்த 118, கீர்த்தி சுரேஷ் நடித்த மிஸ் இண்டியா, சத்யதேவ் நடித்த திம்மரசு உள்பட சில படங்களை தயாரித்தார். பாகுபலி படத்தின் விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றிய அவர், தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பிகில், மாஸ்டர் ஆகிய படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டார். விசாகப்பட்டினத்தில் இருந்த மகேஷ் கொனேருவுக்கு நேற்று காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவுக்கு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.

Related Stories: