கவர்ச்சி பொம்மையா? : பூஜா வெறுப்பு

பிரபாஸ் ஜோடியாக ராதே ஷியாம், அகில் ஜோடியாக மோஸ்ட் எளிஜிபிள் பாச்சுலர் தெலுங்கு படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, இந்தியில் சர்க்கஸ் மற்றும் பெயரிடப்படாத படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழி நடிகைகளும் மாலத்தீவுக்கு ஹாலிடே கொண்டாட டூர் சென்று வந்தனர். மாலத்தீவை சுற்றுலா தளமாக கொண்டாடி, அதை புரமோட் செய்வதற்காக இந்த நடிகைகளை மாலத்தீவிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் இலவசமாக அழைத்திருந்தன. மாலத்தீவுக்கு சென்ற நடிகைகள் லிஸ்ட்டில் சேராத ஒரே நடிகை, பூஜா ஹெக்டே மட்டும்தான். மாலத்தீவுக்கு வரும்படி அழைத்தும் அவர் அங்கு செல்லவில்லை. 

இன்ஸ்டாகிராமில் பூஜாவின் போட்டி நடிகைகள் பலரும், அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ரகுல் பிரீத் சிங் முன்னணியில் இருக்கிறார். அதுபோல் செய்யும்படி பூஜாவையும் அவரது நலம் விரும்பிகள் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் அதையும் ஏற்க பூஜா மறுத்துள்ளார். அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தும் பழக்கத்தையும் அவர் கைவிட்டுள்ளார். தனக்கென சினிமாவில் என்ன கிடைக்குமோ அது தனக்கு கிடைத்தே தீரும் என பூஜா நம்புகிறார். அதற்காக தன்னை கவர்ச்சி பொம்மையாக புரமோட் செய்துகொள்ள அவர் விரும்பவில்லை என பூஜாவுக்கு நெருங்கிய தரப்பினர் சொல்கின்றனர்.

Related Stories:

>