பொன்னியின் செல்வன் நிறுத்தமா?: மணிரத்னம் விளக்கம்

மணிரத்னம், லைக்கா நிறுவனத்துடன் தயாரித்து இயக்கும் படம் பொன்னியின் செல்வன். கல்கி நாவலை மையமாக கொண்டு உருவாகும் சரித்திரப் படம் இது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு உள்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் 2 கட்டமாக 40 சதவிகிதம் முடிந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்பு தடைபட்டது. 3 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கினாலும் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டியது இருக்கும். சரித்திர படத்தில் ஒருநாளைக்கு ஆயிரம் பேர் வரை பணியாற்றுவார்கள். இதனால் பொன்னியின் செல்வன் கைவிடப்படலாம் என்று தகவல் வெளியானது. இதை மணிரத்னம் மறுத்து உள்ளார். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு படப்பிடிப்பு களை எப்படி நடத்தலாம் என்பது குறித்த கலந்துரை யாடல் ஒன்றில் கலந்து கொண்ட மணிரத்னம் இதுகுறித்து கூறியதாவது: கொரோனா ஊடரங்கால் பொன்னியின் செல்வன் தடைபட்டிருப்பது மிகவும் வருத்தமானது. 

பிரமாண்ட போர் காட்சிகள் இனிமேல்தான் படமாக்கப்பட இருக்கிறது. இதில் நிறைய மக்கள் கூட்டத்துடன்தான் இக்காட்சிகளை படமாக்க முடியும். இந்த காட்சிகளை எப்படி படமாக்கப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதை எப்படியோ செய்து முடிப்பேன். நான் ஒரு தொழில்முறை கலைஞன், அதற்கான சம்பளத்தை நான் வாங்குகிறேன். அதனால் அதை படமாக்கி காட்டுகிறேன். அது எப்படி செய்து முடிப்பேன் என்பதை படப்பிடிப்பை முடித்துவிட்டு சொல்கிறேன், என்றார் மணிரத்னம்.

Related Stories: