பா.ரஞ்சித் படத்தில் யோகி பாபு ஹீரோ

காமெடியனாக புகழ்பெற்றவர், யோகி பாபு. குறுகிய காலத்தில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் தர்மபிரபு, கூர்கா, ஜோம்பி ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். இந்த நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே இதே நிறுவனத்தின் பரியேறும் பெருமாள் படத்தில் அவர் நடித் திருந்தார். புது படத்தை இயக்குனர் ஆர்.கண்ணனின் உதவியாளர் ஷான் இயக்குகிறார்.
தந்தைக்கும், மகளுக்கும் இடையே நடை பெறும் உணர்வுபூர்வமான கதைதான் படம் என்கிறார்கள். அழகான மகளை பெற்ற ஒரு அழகற்ற தந்தையின் போராட்டம்தான் கதைக்களம் என்கிறார்கள். இதில் யோகி பாபு முழுக்க முழுக்க மாறுபட்ட சீரியசான கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்குகிறது.

Advertising
Advertising

Related Stories: