சைக்கோவை மன்னித்தது ஏன்? மிஷ்கின் விளக்கம்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், ராஜ்குமார் நடிப்பில் வெளியான சைக்கோ படம், வசூலில் தயாரிப்பாளருக்கு திருப்தி அளித்து இருந்தாலும், கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இதுபற்றி மிஷ்கின் கூறியதாவது: நான் இயக்கியதில் சைக்கோ படத்தைப் போல் வேறெந்த படமும் இவ்வளவு எதிர்ப்பை சம்பாதித்ததில்லை. ஒரு படத்துக்கு விமர்சனம் அவசியம். ஆனால், படத்தை புரிந்து கொள்ளாமலேயே சிலர் விமர்சிப்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

படத்தில் இவ்வளவு வன்முறை தேவையா, ரத்தம் தேவையா என்று கேட்கிறார்கள். சைக்கோ திரில்லர் படம் இப்படித்தான் இருக்கும். அதனால்தான் குழந்தைகள் பார்க்கக்கூடாது என்று ‘ஏ’ சான்றிதழ் வாங்கினேன். கர்ப்பிணிகள் மற்றும் இதயம் பலஹீனமானவர்கள் படம் பார்க்க வராதீர்கள் என்று முதலிலேயே சொன்னேன். சைக்கோவை மன்னிக்கலாமா என்று கேட்கிறார்கள்.

சைக்கோ பற்றி 20 வருடங்களாக படித்து, அதன் அடிப்படையில் இப்படத்தை இயக்கி உள்ளேன். சாதாரண மனிதனுக்கு வரும் மனநோயின் உச்சம்தான் சைக்கோ. இதில் சைக்கோவை உருவாக்குவது ஒரு மத நம்பிக்கையும், அனாதை இல்லங்களில் வழங்கப்படும் கொடூரமான தண்டனையும்தான். அவன் அன்புக்காக ஏங்குகிறான் என்று புரிந்துகொண்ட பிறகுதான் அதிதி ராவ் கேரக்டர் அவனை மன்னிக்கிறது. அது அந்த கேரக்டர் பார்வையில் சொல்லப்பட்டு உள்ளது.

Related Stories: