8 தோட்டாக்கள், ஜீவி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ள வெற்றி, தற்போது 5 புதுப்படங்களில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கேர் ஆஃப் கச்சிராயபாளையம் என்ற தெலுங்கு படம், தமிழில் கேர் ஆஃப் காதல் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஹேமம் பார் இயக்குகிறார். இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங்கிற்கு அக்காவாக நடித்த மும்தாஜ் எனக்கு ஜோடி.