மிஸ்யூ விக்கி...நயன் ஏக்கம்!

நயன்தாரா, விக்னேஷ்சிவன் இணைபிரியாத காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் கிறிஸ்துமஸ்,  புத்தாண்டை நயன்தாரா தனிமையில் கொண்டாடினார். இதையடுத்து விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு இடையே பிரிவு ஏற்பட்டிருப்பதாக நெட்டில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தகவல் பரவியது.

இந்நிலையில் விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப் படத்தை வெளியிட்டு எங்களுக்குள் பிரிவா? அப்படி எதுவும் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார் விக்னேஷ். அத்துடன் இணைப்பு படமாக மிஸ்யூ விக்கி என்று அச்சிடப்பட்ட சால்ட், வினிகருடன் கூடிய நொறுக்கு தீனி பாக்கெட் ஒன்றை வைத்தபடி ஏக்கத்துடன் நயன்தாரா பார்க்கும் படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

Related Stories: