காந்தி கண்ணாடி வெற்றி கொண்டாட்டம்

சென்னை: பாலா ஹீரோவாக நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஷெரிஃப் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தை ஜெய் கிரண் என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்க விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பை கொண்டாடும் வகையில், படத்தின் விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி பி.சக்திவேலன் தனது அலுவலகத்தில் ‘காந்தி கண்ணாடி’ படக்குழுவினரை அழைத்து சிறப்பு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தார். இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Related Stories: