ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தின் டீசரில் இடம்பெற்ற கண் சிமிட்டல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர், பிரியா பிரகாஷ் வாரியர். அவர் கூறியதாவது; சமூக வலைத்தளங்களில் பரவிய என் வீடியோ மூலமாக, ஓவர்நைட்டில் உலகம் முழுவதும் நான் பிரபலமானதை இன்று வரை என்னால் நம்ப முடியவில்லை. அதேவேளையில், என்னைப் பற்றி நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது. மீம்ஸ்கள் மூலமாக என்னை வெறுப்பேற்ற ஆரம்பித்து விட்டார்கள்.