40 வயதில் கிளாமர் காட்ட துடிக்கும் நடிகை

நடிகை பூமிகாவை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. விஜய்யுடன் பத்ரி, சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல், சிறுத்தை, ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம் என பல படங்களில் நடித்துள்ளார். ேடாலிவுட்டிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கதை அம்சமுள்ள படங்களில் நடித்தார். நடிகை களுக்கே வரும் கெத்து பூமிகாவுக்கும் ஒரு காலகட்டத்தில் தலைதூக்கியது.  கிளாமராக நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்தார்.

அந்த வாய்ப்புகளை சகஹீரோயின்கள் பெற்று தங்கள் மார்க்கெட்டை உறுதி செய்துகொண்டனர். கைநழுவிப்போன படங்களை திரும்பிபார்த்த பூமிகா ஷாக் ஆனார். திடீரென்று அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவே அவரை அழைத் தனர். உர்ரானவர் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். ஒரு குழந்தைக்கும் தாய் ஆனார். 40 வயதை கடந்துவிட்ட நிலையில் பூமிகாவுக்கு திடீரென்று கவர்ச்சி காட்டி நடிக்க ஆசை வந்திருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் போட்டோ செஷன் நடத்தி கவர்ச்சி படங்களை வெளியிட்டார். அதை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. தற்போது தனது பழைய கவர்ச்சி படங்களை எடுத்து நெட்டில் வெளியிடுகிறார். சில இயக்குனர்கள் அழைத்தால் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று சம்மதம் சொல்கிறாராம். ஆனால் 40 வயதான நிலையில் எந்த ஹீரோ அவருடன் ஜோடியாக நடிப்பார் என்று புரியாமல் இயக்குனர்கள் தவிக்கிறார்களாம்.

Related Stories: