நயன்தாரா வேடத்தில் சோனம் கபூர்

நயன்தாரா நடிப்பில் உருவாகும் நெற்றிக்கண் படத்தை அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த அவள் படத்தை இயக்கியவர். கொரியா படமான பிளைண்ட் படத்தை தழுவி நெற்றிக்கண் உருவாகிறது. பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் வழக்கு ஒன்றினை விசாரித்து வருகிறார்.

திடீரென விபத்தில் சிக்கும் அவர் பார்வையை இழக்கிறார். தொடர்ந்து அந்த வழக்கை அவர் எப்படி முடிக்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் க்ரைம் திரில்லர் படமாக நெற்றிக்கண் உருவாகிறது. இதே படம் இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது. நயன்தாரா நடிக்கும் கேரக்டரில் சோனம் கபூர் நடிக்கிறார். ஷோமா மகாஜி இந்தியில் இயக்குகிறார்.

Related Stories: