ரூ.1 கோடி வாய்ப்பை உதறிய ஹீரோயின்

படங்களில் நடிக்கவும், விளம்பரங்களில் நடிக்கவும் வாய்ப்பு வராதா என்று பல நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வரும் வாய்ப்புகளை மனதுக்கு பிடித்தால் மட்டுமே ஏற்கிறார் சாய்பல்லவி. சமீபத்தில் தனுஷுடன் அவர் நடித்த மாரி 2 நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் தனுஷுடன் அவர் ஆடிய ரவுடி பேபி பாடல் இணையதளத்தில் 700 மில்லியன் அதாவது 70 கோடி பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது. தற்போது தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார்.

சாய்பல்லவிக்கு புதிய பட வாய்ப்புகள் வந்தபோதும் ஸ்கிரிப்ட்டும் தனது கதாபாத்திரமும் திருப்தியாக இருந்தால் மட்டுமே ஏற்று நடிக்கிறார்.

சமீபத்தில் புதிய படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதிக சம்பளம் தருவதாக கூறி கால்ஷீட் கேட்டனர். உடனே சாய்பல்லவி, நல்ல ஸ்கிரிப்ட்டாக கொண்டு வாருங்கள் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.

விளம்பர படங்களில் நடிப்பதிலும் சாய்பல்லவி ஆர்வம் காட்டுவதில்லை. பிரபல நடிகர் ஒருவர் தான் நடிக்கும் ஆடை விளம்பரம் ஒன்றிற்கு பிராண்ட் அம்பாசிடர் (தூதர்) ஆக இருக்கும்படியும் அதற்காக ரூ.1 கோடி சம்பளம் தர தயாராக இருக்கிறார்கள் என்றும் ஆசை வார்த்தை கூறினார். அதை சாய் பல்லவி ஏற்க மறுத்துவிட்டாராம். ஏற்கனவே அழகு கிரீம் விளம்பரத்தில் பெரிய சம்பளத்தில் நடிக்க அழைத்தபோது அதையும் சாய் பல்லவி ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: