ரஜினி பட ஹீரோயின் கோபம்..

லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்‌ஷி சின்ஹா. இந்தி படங்களில் நடித்து வரும் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தேவையான மேக் அப், காஸ்டியூம் பொருட்களை தனது ராசியான சூட்கேஸில் வைத்து விமானத்தில் எடுத்துச் சென்றார். விமான நிலையத்தில் இறங்கி தனது சூட்கேசஸுக்காக காத்திருந்தவர் அதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த கைப்பிடி, சக்கரங்கள் உடைக்கப்பட்டிருந்தன.

Advertising
Advertising

கோபம் அடைந்த சோனாக்‌ஷி வீடு திரும்பியதும் சூட்கேசை புகைப்படம் எடுத்து அத்துடன் ஒரு மெசஜே் வெளியிட்டார். அதில்,’இது உடைக்க முடியாத சூட்கேஸ். இதையே விமான ஊழியர்கள் உடைத்துவிட்டிருக்கிறார்கள். நல்ல பலசாலிகள்தான். உடைக்க முடியாத சூட்கேசை உடைத்த விமான ஊழியர்களுக்கு நன்றி’ என குறிப்பிட்டிருந்தார். பின்னர் இதை வீடியோவாகவும் வெளியிட்டார்.

சோனாக்‌ஷியின் கோபமான மெசேஜை கண்ட விமான நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு பேசும்போது,’உங்களுக்கு நேர்ந்த பிரச்னையை அறிந்தோம். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை அறிய குழு அமைத்திருக்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துகிறோம். இதுபற்றிய முழுமையான விவரங்களுடன் உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறோம்’ என்றனர்.

Related Stories: